Facebook Twitter மற்றும் Instagram செயலிக்கு இந்தியாவில் தடை

    கடந்த இரண்டு தினங்களாக Facebook, Twitter மற்றும் Instagram போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் தடை செய்வதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதற்கு இந்திய அரசாங்கமோ அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களோ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் இந்திய அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கும், OTT தளங்களுக்கும் ஒரு சில விதிமுறைகளை விதித்திருந்தது. அதற்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்தக் கால அவகாசம் தற்போது முடிவடைந்த நிலையில் இந்த மாதிரியான செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. 
Facebook
    தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களும் இந்திய அரசாங்கத்திடம் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. ஏனெனில் நீங்கள் கொடுத்த கால அவகாசம் எங்களுக்கு குறைவாக இருந்தது. எனவே எங்களால் உங்களின் விதி முறையை பின்பற்ற முடியவில்லை என்று facebook, instagram மற்றும் twitter போன்ற சமூக வலைத்தளங்கள் கூறி வருகிறது. 

    எனவே facebook, instagram மற்றும் Whatsapp போன்ற சமூக வலைத்தளங்கள் இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்திய அரசாங்கமும், சமூக வலைத்தளங்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு தீர்வு காண்பார்கள். என்ன நடந்தாலும் சமூக வலைத்தளங்களை தடை செய்வது மிக கடினம்.
  iQOO 7 Vs Mi 11x - Click Here
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post