Jio 5G Smartphones | Poco F3 GT Mobiles | Tech News

Jio 5G Smart Phone 

    ஜியோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட் போன் திட்டத்தை ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுவதாக கூறி வந்தது. தற்போது ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து 5ஜி ஸ்மார்ட் போன் திட்டத்தை தொடங்குவதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த மொபைல் மிக குறைந்த விலையில் ஜியோ நிறுவனம் வெளியிடுவதாக கூறி வருகிறது. 
Jio 5G Smartphone

Smart Phone Price High

    இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் மொபைலின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் புதிய மொபைலில் இருக்கும் சிப்பின் திறன் அதிகமாக இருப்பதால் மொபைலின் விலை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் தற்போதுள்ள நிலையில் மொபைலின் பாகங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே இனிவரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மொபைலின் விலை அதிகரிக்கலாம்.  
Oneplus TV- Click Here

Poco F3 GT

    Poco தரப்பிலிருந்து Poco F3 GT என்ற மாடல் வெளியாக தயாராக உள்ளது. இதன் டிஸ்ப்ளே 6.67 இன்சாகவும், Dimensity 1200 என்ற 5ஜி சிப்புடனும் வருகிறதாம். இதன் பேட்டரி 5065 mAh மற்றும் ஆண்ட்ராய்ட் 11 Os உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் 6GB,128GB ஆகும். முன்புறமாக 16 மெகாபிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்னும் இரண்டு மாதங்களில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DoT allocates Spectrum 

    Department of telecommunication ஒரு திட்டத்தை Airtel, Jio, Vodafone போன்ற நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது. அது என்னவென்றால், DoT தரப்பிலிருந்து உங்களுக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் கொடுக்கப்படும். நீங்கள் அதை வைத்து 5ஜி சிக்னலை பற்றி ஆராயலாம். இதன்மூலம் கூடிய சீக்கிரம் இந்தியாவில் 5ஜி launchஆக எளிதாக இருக்கும் என கூறியுள்ளது.

McLaren to enter India 

    McLaren கார்களை தற்போது இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் infinity நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய விற்பனை மற்றும் சேவைகளை தொடங்குவதாக கூறியுள்ளனர். மிக விரைவில் தனது Sports கார்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

2 Comments

Previous Post Next Post