Realme Tech | Honor 50 Series | Tech News

Realme Tech 

    Realme ஒரு sub-brand அறிமுகப்படுத்துவதாக கூறி வந்த நிலையில், தற்போது அந்த பிராண்ட் பெயரை வெளியிட்டுள்ளது. அந்த sub brand பெயர் "Dizo" என அறிவிக்கப் பட்டுள்ளது. முதலில் realme என்னும் நிறுவனமே ஒரு sub brand தான், தற்போது இதிலிருந்து ஒரு sub brand அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதாக கூறப்பட்டு வருகிறது. 

Honor 50 Series 

    Honor தரப்பிலிருந்து Honor 50 Series-ல் புதிய மொபைலை வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த மொபைல் உலக அளவில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இது இந்தியாவில் வெளியாகுவது பற்றி எதுவும் கூறவில்லை. 
Honor 50 Series

Dominos Data Breach 

    Dominos என்னும் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேலை நீங்கள் இந்த செயலியில் உங்கள் விவரங்களை கொடுத்து இருந்தால் உங்களின் விவரங்களும் திருடப் பட்டிருக்கும். 

Kia New Scheme 

    Kia கார் நிறுவனம் தற்போது ஒரு புதிய மாடல் காரை வெளியிட்டுள்ளது. அந்த மாடலின் பெயர் Kia Carnival. இந்த மாடல் காருக்கு ஒரு புதிய சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் நீங்கள் கார் வாங்கிய 30 நாட்களுக்குள் உங்களுக்கு காரில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் நீங்கள் அந்த காரை திரும்பி கொடுத்து, உங்களின் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். 

TCS Company in New Project 

    இந்திய நிறுவனமான TCS என்னும் TATA நிறுவனத்திற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலவிதமான புதிய திட்டங்கள் வருவதாக கூறி வருகிறது. தற்போது இருக்கும் கொரோனா ஊரடங்கிற்கு ஏற்றவாறு பல திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த கம்பெனியின் வேலை வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொள்ளவும். 

Paul Walker's Toyota Supra 

    Fast and furious படத்தின் முதல் பாகத்தில் Paul Walker உபயோகப்படுத்திய Toyota Supra இன்னும் காரை தற்போது ஏலம் விடுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த கார் பல கோடி ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post